என் குருநாதர்கள்!!!
1. பசித்த புலி தீயை விழுங்கும். -சாக்ரடீஸ்
2. கடன் என்பது ஆழம் காணாக் கடல். -கார்லைல்
3. மனிதனைவிட மகத்தான சக்தி சுற்றுப்புறமே. -நேரு
4. மரியாதையால் விளைவது அதிகாரத்தால் விளையாது. - காந்தியடிகள்
5. முதலில் தகுதி பின்னர் ஆசை. -ஃபிராங்க்ளின்
6. மருத்துவர்களைவிட சிறந்த மருந்து உணவுதான்.-டாக்டர் ராதாகிருஷ்ணன்
7. கீர்த்தியின் விலை பொறுப்பாகும். - சர்ச்சில்
8. மனிதனுக்கு முதல் எதிரி அவனேதான். - சிசரோ
9. நல்ல மனிதனுக்கு ஆணிவேர் பணிவுதான்.-மகாவீரர்
10. விவேகத்தின் மறுபக்கம் வீரம், தைரியம்.- ஷேக்ஸ்பியர்
----------------------------------------------

1. தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை. -கன்ஃபூசியஸ்
2. உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே! -டால்ஸ்டாய்
3. நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது! -சாக்ரடீஸ்
4. பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும். -ரூஸோ
5. உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மைதான் நிலைத்து நிற்கும். -இங்கர்சால்
6. உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது! -கார்ல் மார்க்ஸ்
7. பிறர்நலம் போற்ற வேண்டும்; தன்னைப் போல பிறரையும் எண்ண வேண்டும்.-லெனின்
8. பல நூல்களை ஒருவன் படிக்க வேண்டும்; நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்குப் பேரிழப்பாகும்! -ஆபிரகாம் லிங்கன்
9. உண்மை பேசுவது கசப்பாக இருப்பினும் அந்த உண்மையே எல்லாவற்றிலும் சிறந்தது! -நபிகள் நாயகம் .
=========================

விவேகானந்தரின் பொன்மொழிகள்:
1. யாருக்குத் தன்னிடம் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.
2. உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.
3. நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
4. மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களைவிடவும் உயர்ந்தவன். மனிதனைவிட உயர்ந்தவர் யாருமே இல்லை.
5. உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
6. உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
7. மனிதனுக்குள் ஏற்கெனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.
8. முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி, பிறகு உனக்குத் தானாகவே வரும்.
9. லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.
10. உங்களிடமே நம்பிக்கை வையுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள்!
========================
========================
1. ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோகமும் கிடையாது!-காந்திஜி
2. இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன்; எதிர்கால வாழ்விலும் இறந்தவன்!-யூரிபிடிஸ்
3. கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது; ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்!-பிளேட்டோ
4. கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!-எட்மண்ட்பர்க்
5. கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்!-ரஸ்கின்
6. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது! -பெர்னார்ட்ஷா
7. நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்!-மூர்
8. சான்றோன் ஆக்காத கல்வி சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும்! -போலிங் புரூக்
9. தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பதுமே கல்வி!-பெஸ்டலசி
10. ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்.
********************************
********************************
1. கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே! -பாண்டிச்சேரி அன்னை
2. தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்! -அரவிந்தர்
3. நிறை கண்டால் போற்றுங்கள்; குறை கண்டால் பேசாதீர்கள்! -இயேசு
4. தயாள சிந்தனை உள்ளவர்கள் இறைவனின் அன்பிற்குரியவர்கள்! -நபிகள் நாயகம்
5. அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை! -புத்தர்
6. தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு! -ரமணர்
7. அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்! -வள்ளலார்
8. சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்! -மகாவீரர்
9. அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்! -திருமூலர்
10. இறைவன் நம்மை அன்பு என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பார்க்கிறார்! -குருநானக்.
**************************
1. பெண் என்பவள் முடிந்தபோது சிரிப்பாள்; ஆனால் நினைத்தபோது அழுவாள்! -பிரான்ஸ்
2. ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது! -இத்தாலி
3. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது; அதைக் கீழே இறக்கினால் மனம் நோகிறது! -பொலிவியா
4. விரும்புவதைப் பெற முடியவில்லை என்றால் பெற முடிந்ததை விரும்ப வேண்டும்! -ஸ்பெயின்
5. கேள்வி கேட்கத் தெரிந்தாலே. பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம்! -இத்தாலி
6. அறிவு உள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களுக்கு அறிவு இருப்பதில்லை! -சீனா
7. பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்; ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது! -பிலிப்பைன்ஸ்
8. பணத்தில் நம்பிக்கை வைக்காதே; நம்பிக்கையான இடத்தில் பணத்தைப் போட்டு வை! -பலூசிஸ்தான்
9. விவசாயிகள் சேற்றில் கை வைப்பதால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது! -இந்தியா
10. உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு; மற்றொன்று இதயம்! -அமெரிக்கா.
=========================
=========================
1. மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது.
2. அறியாமையிலிருந்தே பயம் தோன்றுகிறது.
3. முதலாவது தெய்வம் ஆரோக்கியம்.
4. நம்பிக்கையின் திருடன்தான் மேடைப் பிரசங்கி.
5. உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறுசிறு தியாகங்கள்.
6. வரலாறு எதுவும் இல்லை; வாழ்க்கை வரலாறுதான் இருக்கிறது.
7. பகையோ, குறைகூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள்!
8. சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதைத் தவிர, வேறு ஏதோ அன்று!
9. நம்பிக்கை என்பது ஒரு தூரதரிசினிக் கருவி!
10. படிப்பதற்கு மூன்று விதிகள்:
- ஒரு வருடத்திற்குள் வெளியான புத்தகத்தைப் படிக்காதே!
- புகழ்பெற்ற புத்தகங்களைத் தவிர வேறொன்றும் படிக்காதே!
- நீ விரும்பும் புத்தகங்களைத் தவிர வேறொன்றும் படிக்காதே!
----------------------------------------------
1. சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை! - ஆண்டர்சன்
2. பிறர் குற்றங்களைக் காண முயல்பவன் அரை மனிதன்! - வேட்லி
3. தொண்டு என்பது அடிமை வேலையன்று - அது தெய்வப் பணியாகும்! - திரு.வி.க
.4. செல்வம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது; செல்வம் இல்லாவிட்டாலோ உன்னை யாருக்கும் தெரியாது! - ஸ்பெயின்
5. புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது! - எச்.மாண்
6. நாளை என்பது சோம்பேறிகளின் தினமாகும்! - பாபுராவ்
7. திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும்! - ஹேஸ்டர் பீல்
8. தோல்வி என்பது உண்மையை நிலைநாட்ட ஏற்படும் அனுபவம்! - பீச்சர்
9. நேர்மையான உழைப்பில் கெüரவம் இருக்கிறது! - கிளீவ்லாண்ட்
10. சுதந்திரமாக இரு; எவரிடமிருந்தும் எதையும் ஏதிர்பார்க்காதே! - சுவாமி விவோகானந்தர்.
*************************************
*************************************
1. இறைவனால் எல்லா இடத்திலும் இருக்க முடியாததால்தான் தாயைப் படைத்தான்! - யூதப் பழமொழி
2. அன்னையின் ஆழ்மனதில் உனக்கு எப்போதும் மன்னிப்பு உண்டு. - பல்சாக்
3. அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்! - ஹென்றி வார்ட்
4. தொட்டில் ஆட்டப்படும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்பவர் குழந்தையா? அன்னையா? - நான்ஸி
5. சிறந்த பல்கலைக்கழகம் அன்னையின் மடிதான். - ஜேம்ஸ் ரஸ்ஸல்
6. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் உதவ மாட்டான்! - தமிழ் பழமொழி
7. தாயைப் பார்க்கிலும் சிறந்த கோயிலுமில்லை. - தமிழ் பழமொழி
8. பிள்ளை அருமை பெற்றவளுக்குத் தெரியும் - தமிழ் பழமொழி.
****************************************
****************************************
1. கொடுப்பது என்பது சிறந்த, உயர்ந்த பண்பாகும். மன்னிக்கும் பண்புடன் இணையும்போதுதான் அது முழுமை அடைகிறது.
2. ஒவ்வொரு நொடியும் படைப்பதற்கான நொடியே. அதை வீணாக்க வேண்டாம்.
3. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஆற்றல்கள். அவற்றை இழக்க வேண்டாம்.
4. இந்த உலகத்தில் இந்தக் கண்கள் பார்க்க இழந்ததைத் திரும்பப் பார்க்கப் போவதில்லை. ஆகையால் மிகச் சிறந்தவற்றையே செய்யுங்கள்.
5. நாம் புன்னகை என்ற உடையை அணிய வேண்டும். அதைப் பாதுகாக்க நம் ஆத்மா நல்ல குணங்கள் என்ற உடையை அணிய வேண்டும்.
6. வெற்றி அடைய சிறந்த வழிகளாக எளிமையையும் கடின உழைப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
7. எல்லா வகையான வலிகளைத் தீர்க்கவும் எல்லாவிதமான காயங்களைக் குணப்படுத்தவும், மிகச் சிறந்த மருத்துவர்கள் - காலம், பொறுமை மற்றும் இயற்கை.
8. பொறுப்புள்ள, எளிமையான, நேர்மையான கடின உழைப்பாளிகளைக் கடவுள் மதிக்கின்றார். ஏனெனில் அவர்கள்தான் உலகில் அவருடைய மிகச் சிறந்த படைப்பு என்று கடவுள் கருதுகிறார்.
*************************************
அமைதி

1. தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன் பேசுவானாகில் உலகில் முழு அமைதி நிலவும். - பெர்னார்ட் ஷா
2. போருக்குக் குறையாத பெருமையுள்ள வெற்றிகள் அமைதிக்கும் உண்டு. - மில்டன்
3. அமைதியில்தான் அழகின் நிறைவுத்தன்மை இருக்கிறது. - தாகூர்
4. சமாதானத்தை உண்டாக்குபவர்கள் பாக்கியசாலிகள். - புதிய ஏற்பாடு (பைபிள்)
5. போரைப் போலவே அமைதியும் புகழ்பெற முடியும். - லத்தீன் பழமொழி
6. இனிய அமைதி மக்களுக்கு ஏற்றது; கொடுமையான கோபம் விலங்குகளுக்கு உரியது. -லத்தீன் பழமொழி
7. அமைதி உள்ள இடத்தில்தான் இறைவன் உள்ளான். - இங்கிலாந்து
8. சாந்தமாக வாழ விரும்புவோன் ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் தண்ணீர் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். - செர்பியா
9. அமைதி உணவளிக்கிறது. போர் வீணாக்குகிறது. அமைதி ஜனப் பெருக்கத்தை உண்டாக்குகிறது, போர் அவர்களை அழிக்கின்றது. - டென்மார்க்
10. நிம்மதியான அமைதி என்பது முதல் சண்டை வரைதான். - ரஷ்யா.
===========================

கிடைத்துள்ளதை விரும்பு
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே..
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!!
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!!
No comments:
Post a Comment