வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Sunday, November 30, 2014

சிவனருளும், குருவருளும் -அருள் விளக்கங்கள் 16


சிவனருளும் - குருவருளும்

துறவின் நோக்கம் தான் என்ன? வெள்ளை உடைகளைத் துறப்பது மட்டும் தானா? ஆசை உட்பட எல்லாவற்றையும் துறப்பவன் துறவி ஆகிறான். மனத்தை ஒடுக்கித் தவம் செய்கிறான். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுக்கிறான். வெளி உலகியலில் இருந்து விலகித் தவம் செய்கிறான். அதனால் என்றாவது இறை இன்பத்தை உணருகிறான்.

புகைப்படங்கள்.- அருள் விளக்கங்கள்-15






மௌனம் - அருள் விளக்கங்கள் 14


மௌனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப் பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.
இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

மனம் - அருள் விளக்கங்கள் 13

மனம்


1) வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

 தவறிழைப்பது மனம் இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான் ,தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே ,மனதை பழைய நில்லையிலேயே வைத்துக்கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும் ?

Saturday, November 29, 2014

"கர்மயோகம்" - அருள் விளக்கங்கள் 12

"கர்மயோகம்" - அருட் தந்தை வேதாத்திரி அருள் விளக்கங்கள்

கர்ம யோகம் என்பது கடமை அறம் என்பதாகும். தனக்கும் சமுதாயத்திற்கும் எந்த துன்பமும் விளைவிக்காமல், நன்மையே தரக்கூடிய செயல்களை மட்டும் செய்து வாழ்வது கர்ம யோகம். 

கர்மம் என்றால் செயல். செயல் என்பது கடமையை குறிக்கின்றது. கடமை என்பது நன்றி உணர்வு. தொப்புள்கொடி (பிறப்பு) அறுப்பது முதல் அரைஞான் கயிறு (இறப்பு) அறுப்பது வரை மனிதனானவன் பிறருடைய உதவியால் வாழ்ந்துவருகிறான். அவனது வாழ்வில் அவன் சாதித்ததாக நினைக்கும் அனைத்தும், அவன் பெற்றது அனைத்தும் சமுதாயத்தால் அவனுக்கு அளிக்கப் பட்டவைகளே.