வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Sunday, November 30, 2014

மனம் - அருள் விளக்கங்கள் 13

மனம்


1) வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

 தவறிழைப்பது மனம் இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான் ,தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே ,மனதை பழைய நில்லையிலேயே வைத்துக்கொண்டு புதிய நல்ல வழியில் எப்படிச் செல்ல முடியும் ?
2) மனத்தின் குறைகளைப்  போக்கியாக வேண்டும்,நல்வழியில்  தீர்மானமாக நிற்கின்ற சுயபலத்தை மனதிற்கு ஊட்டி யாகவேண்டும் ,அதையார் செய்வது?மனம் தான் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும் 

3) மனத்தை தாழ்த்திக்கொள்வதும் உயர்த்திக் கொள்ளவதும் மனத்திடம் தான் இருக்கிறது ,மனம் தன்னை உயர்த்திக்கொண்டால் இடையறா இன்பநிலையை  அடையலாம் 

4) இன்பமும் அமைதியும் மனத்திற்க்குள்ளிருந்து தான் வர வேண்டும்,அதற்க்கு மனம் தன்னையே நன்கு பூரணமாய் அறிந்து கொள்ள வேண்டும் ,மனம் தனது மூலமான உயிரில் ஒடுங்கிப் பின்னர் உயிரின் மூலமான இறைநிலையை எழுதினால் அறிவாகிறது ,அன்னில்லையைப் பெற்ற மனத்தினைக் கொண்ட மனிதனும் தெயவதரத்தில் ஒன்றே

5) மனம்-இயற்க்கை-சமுதாயம் என்ற முக்கோணத்திற்குள் தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும்,இதில் இயற்கை மாற்றபட முடியாது,அதனை மனம் அறிந்து மதிக்கின்ற அளவுதான் மனத்திற்கு உயர்வு கிட்டும் 

வாழ்க வளமுடன் வேதாத்திரியம்


No comments:

Post a Comment