வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, February 29, 2012

அனுபவம் ஒரு ஆசான் - அருள் விளக்கங்கள் 2

ஓர் அனுபவசாலியின் கருத்து 

*எல்லோரையும் நேசியுங்கள்,யாரையும் வெறுக்காதிர்கள்,

*வெறுப்பு வாழ்நாளை குறைக்கும் , 

*ஓர் 100 - உற்றாரைவிட ஒரு கற்றவருடைய நட்பே மேல்,

*உண்மையான அறிஞரிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம் 
சிறிதும் இருக்காது ,


*நம்பிக்கை துரோகம் செய்பவன் மாபெரும் குற்றவாளி,

*உழைப்பு பிழைப்புகாக மட்டுமிலாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும் ,

*பொய் சொல்லி பரிசு பெறுவதை விட உண்மை சொல்லி துன்பபடலாம் ,

*சோம்பேறிதனம்தான் பொறுமை என்ற பெயரில்  தவறாக கணிக்கப் படுகிறது ,

*கவலைகளை மறக்க கடமையை செய் மனம் நிம்மதி அடையும் ,

*தளராத முயற்சிக்குத் தன்னம்பிக்கை அவசியம் ,

*உன்னைத்தவிர உன்வேலையை யாராலும் சிறப்பாக செய்யமுடியாது ,

*பலர் முன் பயனில்லாததைக் கூறுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான் ,

*அழிவுக்கு முன் கர்வம் வரும், வீழ்ச்சிக்கு முன் திமிர் வரும் ,

*அமைதி அனைத்தும்  பெற்று தரும் ,

*எல்லோரும் கடை திறக்கலாம் ஆனால் புத்திசாலிதான் லாபத்தோடு நடத்துவான் ,

*ஒவ் வொரு புதுசெயலிலும் உங்கள் பழைய அனுபவத்தைப் பயன் படுத்துங்கள் ,

*நம்முடைய செயல்களே நம்மை யார் என்று பிறர்க்கு உணர்த்தும் ,

*சோம்பலை போக்கு அப்போதுதான் நீசுதந்திரமான மனிதன் ,

*தனை புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான்,பணிவு உடையவன் புகழப் படுவான் ,

*பொறுப்பு உள்ளவன் புகழ் பெறுவான் இருமாப்புள்ளவன் ஏமாறுவான்,

*குறை சொல்பவன் தேவை இல்லை வ்ழிகாட்டுபவன்  தேவை 

******வாழ்க வளமுடன் *******

No comments:

Post a Comment